"யாருக்காகவும் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை" - சி.வி. சண்முகம் பரபரப்பு கருத்து
ஈரோடு கிழக்கு தேர்தல் அலுவலரை மாற்ற வேண்டுமென அதிமுக எம்.பி சிவி சண்முகம், இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகாரளித்துள்ளார்.
டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து மனு அளித்த அவர், ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களில், 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் தற்போது தொகுதியிலேயே இல்லை என தெரிவித்தார்.
திமுக அரசு கூறுவதை கேட்டு தேர்தல் அலுவலர் செயல்படுவதகாவும், அவரை நீக்க வேண்டுமென புகாரளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அதிமுக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென பாஜக கூறியிருப்பதற்கு, அதிமுக யாருக்காகவும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என சி.வி சண்முகம் பதிலளித்தார்.