"ராத்திரியோட ராத்திரியா இப்படி பண்ணீட்டாங்களே" - மாரில் அடித்து கதறி அழுத பெண்

Update: 2022-10-31 09:04 GMT

"ராத்திரியோட ராத்திரியா இப்படி பண்ணீட்டாங்களே" - மாரில் அடித்து கதறி அழுத பெண்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மிளகாய் செடிகளை வனத்துறையினர் அழித்துவிட்டதாக கூறி பெண் ஒருவர் கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பண்ருட்டி அருகே ஒறையூர் பகுதியை சேர்ந்த கங்காதேவி என்பவர், அப்பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தை சீர் செய்து விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த நிலத்தில் பயிரிட்டிருந்த மிளகாய் செடிகளை வனத்துறையினர் இரவோடு இரவாக பிடிங்கி எறிந்த‌தாக கூறி விவசாய நிலத்திலேயே கங்காதேவி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்