நடப்பு ஐபிஎல் சீசன் தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைந்து வழங்கி வந்தது. அதன்படி, சேப்பாக்கத்தில் சிஎஸ்கே மோதும் போட்டிகளுக்கு, கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் டிக்கெட்டின் கியூ ஆர் கோர்டு மூலம் சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணித்து வந்து போட்டியை கண்டுகளித்தனர். இந்நிலையில், நடக்க இருக்கும் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுகள் முற்றிலும் பிசிசிஐ-யால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, கிரிக்கெட் ரசிகர்களுக்கான இலவச பயணமும் முடிவுக்கு வந்ததுடன், பிளேஆஃப் போட்டிகளை கண்டுகளிக்க வருகை தரும் ரசிகர்கள், மெட்ரோ ரயிலில் பயணிக்க பயணச்சீட்டுகளை பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.