கொந்தளித்த நீதிமன்றம்... - குப்பை கிடங்கு-க்கு ஓடோடி வந்த கலெக்டர்... | Renu Raj
கொச்சி பிரம்மபுரத்தில் தீப்பற்றி எரிந்த குப்பை கிடங்கை, எர்ணாகுளம் மாவட்டத்தின் புதிய ஆட்சியர் என்.எஸ்.உமேஷ் நேரில் ஆய்வு செய்தார். குப்பைக்கிடங்கு தீப்பிடித்த விவகாரத்தை, விசாரித்து வரும் உயர்நீதிமன்ற அமர்வு, எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் ரேணு ராஜுக்கு கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து, அவர் வயநாட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், எர்ணாகுளம் மாவட்டதிற்கு புதிதாக பொறுப்பேற்ற ஆட்சியர் என்.எஸ். உமேஷ், குப்பைக் கிடங்கை பார்வையிட்டு, அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு குழு ஒன்றை அமைத்த கேரள உயர்நீதிமன்றம், 24 மணி நேரத்திற்குள் சம்பவ இடத்தை பார்வையிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.