ஒடிசாவில் நிகழ்ந்த கோரமண்டல் ரயில் விபத்து நிகழ்ந்த விவகாரத்தில், மேலும் 17 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இரண்டாவது சிறப்பு ரயில் மூலம் 17 பேர் மீட்கப்பட்டு தமிழகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். முன்னதாக பயணிகளுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு காவல்துறையும் ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை மருத்துவ குழுவும் தயார் நிலையில் இருந்தனர். பிற்பகல் 12 :45 மணி அளவில் சிறப்பு ரயிலானது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை ஒன்றிற்கு வந்தடைந்தது. பயணிகளின் உறவினர்கள் நண்பர்கள் அவர்களை வரவேற்று உரிய இடங்களுக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்த காவல்துறை துணை ஆணையர் ஸ்ரேயா மற்றும் வருவாய் துறை அலுவலர் ரங்கராஜன், காவல்துறையினர் 24 மணி நேரமும் தயாராக இருப்பதாக கூறினர்.