ட்விட்டரில் வந்த புகார்.. உடனே சரிசெய்து ட்விட்டரிலேயே பதில் கொடுத்த மதுரை மாநகராட்சி

Update: 2022-08-11 08:43 GMT

மதுரையில், சாக்கடை கழிவு நீர் தொடர்பான புகாரில், 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்து மாநகராட்சி நிர்வாகம் ரீ-ட்வீட் செய்துள்ளது. காமராஜபுரம் பகுதியில் உள்ள தெருக்களில், சாக்கடை நீர் குளம் போல் தேங்கியது. இது தொடர்பாக, அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள், மாநகராட்சியை ட்விட்டரில் டேக் செய்து புகார் அளித்தனர். இதையறிந்த மாநகராட்சி நிர்வாகம், 24 மணி நேரத்தில் சாக்கடை நீரை சுத்தம் செய்து நடவடிக்கை எடுத்தது. பின்னர், அதே ட்விட்டர் வாயிலாக தங்களை இணைத்ததற்கு நன்றி, தங்களது புகார் சரி செய்யப்பட்டது என, ரீ-ட்வீட் செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்