கேரள மாநிலத்தில் கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் 6 ஆயிரம் பேர் வயிற்றுபோக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வெளியே சாப்பிட்ட உணவால், நூற்றுக்கணக்கானவர்களுக்கு சிறிய மற்றும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை தொற்றிய பழைய உணவு மற்றும் கழிவுநீர் மூலம் வயிற்றுப்போக்கு நோய் பாதிப்பு என விளக்கம் அளித்துள்ளது.