"முடியலைன்ன ரிசைன் பண்ணிட்டு போங்கம்மா" - ஊராட்சி மன்ற தலைவரை எச்சரித்த ஆட்சியர்

Update: 2022-12-15 02:31 GMT

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாத பஞ்சாயத்து தலைவரை ராஜினாமா செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

காளசமுத்திரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் முருகேஷ், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை பார்த்து ஊராட்சி மன்ற தலைவரை கடுமையாக எச்சரித்தார்.

முறையாக பராமரிக்காமல் இருந்த குடிநீர் குழாயை பார்த்து மக்கள் பயன்படுத்தமுடியுமா இதனை என கேள்வி கேட்டு ஆவேசமடைந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்