'நீ பேசாத..நீ எதுக்குடா பேசுற" "எதுக்கு அடிக்கிறிங்கனு கேட்க கேட்க அடிச்சாங்க சார்" | Coimbatore

கோவையில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய போக்குவரத்து போலீஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீலம்பூரை சேர்ந்த மோகனசுந்தரம்...;

Update: 2022-06-04 13:57 GMT

கோவையில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய போக்குவரத்து போலீஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீலம்பூரை சேர்ந்த மோகனசுந்தரம், பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். இதனிடையே சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து 2 பேர் மீது மோதவே பேருந்தை மோகனசுந்தரம் நிறுத்தியதாக தெரிகிறது. இதனை பார்த்த போக்குவரத்து முதல் நிலை காவலர் சதீஷ், உடனே விரைந்து வந்து மோகனசுந்தரத்தை பிடித்து கன்னத்தில் அறைந்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவிய நிலையில் காவலர் சதீஷ், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்