கோவை, திருப்பூர், சேலம் வழியாக சென்னை, பெங்களூர் செல்லும் ரயில் தடம் முக்கிய வழித்தடமாக உள்ளது. இந்த வழித்தடங்களில் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், உள்பட தினசரி 50 க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், டிசம்பர் 3-ஆம் தேதி சேலத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
இதனால் இந்த வழியாக செல்லும் 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதில் 3 ஆம் தேதி காலை, கோவையில் இருந்து கிளம்பக் கூடிய கோவை- சென்னை இண்டர்சிட்டி ரயில், மறுமார்க்கத்தில் சென்னை- கோவை இண்டர் சிட்டி ரயில், கோவை எக்ஸ்பிரஸ் ரயில், கோவை - சென்னை செண்ட்ரல் ஜனசதாப்தி ரயில், கோவை - பெங்களூர் உதய் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் - பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் - பெங்களூர் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய 10 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், ரயில் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.