"ஏப். 1 முதல் காலி மது பாட்டில்களை கொடுத்தால்... ரூ.10 பெறலாம்" - கோவை கலெக்டர் அதிரடி

Update: 2023-03-29 05:17 GMT
  • கோவை மாவட்டத்தில் காலி மதுபான பாட்டில்களை டாஸ்மாக் கடைகளிலேயே திரும்பப்பெறும் திட்டம், வரும் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
  • நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் வீசப்படும் மதுபான பாட்டில்களால் இயற்கை சூழல் மற்றும் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை கருத்தில் கொண்டு, டாஸ்மாக் மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை நடைமுறைப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களிலும் அமல்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தியது.
  • இந்நிலையில், கோவை மாவட்டத்தில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை, வரும் ஏப்ரல் 1 ம் தேதி முதல் அமல்படுத்த இருப்பதாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
  • வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு கூடுதலாக பத்து ரூபாய் பெறப்படும் - இதற்கான ஸ்டிக்கர் மது பாட்டிலிலேயே ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
  • காலி மதுபான பாட்டில்களை மீண்டும் டாஸ்மாக் கடைகளில் கொடுத்து, பத்து ரூபாயை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்றும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்