முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம்.. நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமா..? - எம்.பி. டி.ஆர்.பாலு பதில்

Update: 2023-03-01 02:04 GMT
  • சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.வில் நடைபெறும் 70 வது பிறந்த நாள் பொது கூட்டத்தின் ஏற்பாடுகளை, தமிழக அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.
  • முதலமைச்சர் ஸ்டாலினின் 70 - வது பிறந்த நாளை முன்னிட்டு புதன்கிழமை மாலை தென் சென்னை திமுக சார்பில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
  • இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
  • இந்த கூட்டத்தை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
  • இதனை நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, சக்கரபாணி, மூர்த்தி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.
  • ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை அமைச்சர் துரைமுருகன், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
  • அப்போதுஇந்த பொதுக்கூட்டம் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் அல்ல என டி.ஆர்.பாலு குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்