கூகுள் மேப் மூலம் கடல் கடந்து சென்று தந்தையின் கல்லறையை கண்டுபிடித்த மகன்-முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

தந்தையின் கல்லறையை சுமார் 55 ஆண்டுகள் கழித்து கடல் கடந்து தேடி சென்று அஞ்சலி செலுத்திய மகனின் நெகிழ்ச்சிகரமான செயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகாழாரம் சூட்டியுள்ளார்.

Update: 2022-11-23 05:50 GMT

தென்காசி மாவட்டம் கடையம் அருகே வெங்கடாம்பட்டியை சேர்ந்தவர் திருமாறன். சமூக ஆர்வலரான இவர் டிரஸ்ட் மூலம் குழந்தைகள் இல்லம் நடத்தி வருகிறார். இவருடைய தந்தை ராமசுந்தரம், 55 ஆண்டுகளுக்கு முன் மலேசியாவில் ஆசிரியராக பணிபுரிந்து மறைந்தவர். இறந்த ராமசுந்தரத்திற்கு மலேசியாவிலே கல்லறை எழுப்பி விட்டு இந்தியா திரும்பி இருக்கிறார் மனைவி ராதாபாய். இந்தியா திரும்பிய சில வருடங்களிலே ராதாபாயும் இறந்து விட, தாய் கூறிய தந்தையின் நினைவுகள் திருமாறனை வாட்டியுள்ளது. இந்நிலையில், 55 ஆண்டுகள் கழித்து கடல் கடந்து மலேசியா சென்ற திருமாறன் தந்தையின் கல்லறையை தேடி பிடித்து அஞ்சலி செய்துள்ளார். இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில் திருமாறனுக்கு புகாழாரம் சூட்டியுள்ளார். அதில், அன்பின் தேடலில் தான் வாழ்நாளெல்லாம் நம் வாழ்வின் பயணம் அமைகிறது என்றும், திருமாறனின் செயலால் நெகிழ்ந்து நெக்குருகி போனேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்