- வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கேரளா சென்றார்.
- சமூக நீதிக்காகவும் தீண்டாமைக்கு எதிராகவும் பெரியார் முன்னின்று நடத்திய வைக்கம் போராட்டம், 603 நாட்கள் நீடித்து 1925 ஆண்டு நவம்பர் 23 ம் தேதி வெற்றிகரமாக முடிவுற்றது.
- இதனையொட்டி கேரள அரசு வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை, இன்று முதல் 603 நாட்கள் சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளது.
- இந்தநிலையில் இந்த நூற்றாண்டு விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று கேரளா சென்றார்.
- கேரளா முதல்வர் பினராயி விஜயனின் அழைப்பை ஏற்று சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், வைக்கம் பகுதியில் நடைபெறும் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றவுள்ளார்.