"தலைவர் கருணாநிதி பேனாவில் போட்ட ஒரே கையெழுத்து... லட்சக்கணக்கான மாணவ மாணவிகளை உருவாக்கியுள்ளது" புதுமைப் பெண் திட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்....
புதுமைப்பெண் திட்டத்தின் 2ஆம் கட்ட தொடக்க விழாவில், முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
"உயர் கல்வியில் மாணவிகள் சேர்க்கை அதிகரித்துள்ளது" "காவல்துறையில் நேற்று பணி நியமனம் பெற்ற 17 பேரில் 13 பேர் பெண் டிஎஸ்பிக்கள்"
"பெண்களுக்கு கல்வி மிக மிக முக்கியம்" "அனைவரும் சமம், அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கவேண்டும் என்பதே எங்களின் நோக்கம்"
"திராவிட இயக்க வரலாறு ஒரு போராட்ட வரலாறு, அதுவே தமிழ்நாட்டின் வரலாறு"
"கல்வியை அனைவருக்கும் சமமானதாக ஆக்க முயற்சி செய்து வருகிறோம்"
"இந்தியாவிலேயே முதன்முறையாக கருணாநிதி ஆட்சியில் தான் பெண்களுக்கு சொத்துரிமை கிடைத்தது"
"திமுக ஆட்சியில் தான் பெண்களுக்கு சொத்துரிமை, இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது"
"திமுக ஆட்சியில் பெண்கள் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது"
"மூட நம்பிக்கையால் முடக்கப்பட்டிருந்த பெண்களுக்காக போராடியவர் ராமாமிர்தம் அம்மையார்"
"பள்ளி கல்வியை முடிக்கும் மாணவிகள், கண்டிப்பாக உயர்கல்வியை தொடரவே இந்த திட்டம்"
"பெண்கள் சொந்த காலில் நிற்பதற்காக மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டன"
புதுமைப்பெண் திட்டம் மூலம், பொருளாதார நெருக்கடியில் இருந்த பெண்கள் கல்வியை தொடர்கிறார்கள்
"இத்திட்டத்தின் மூலம் 12,000 மாணவிகள் மீண்டும் உயர்கல்வி படிக்கின்றனர்"