ரோபோ சங்கரின் ஹோம் டூர் வீடியோ ...சிக்கிய கிளிகள்..என்னதான் நடந்தது? "திருமணம் முடிந்து சென்றதாக நினைச்சிக்கிறோம்" - ரோபோ சங்கரின் மனைவி விளக்கம்
- நாய், பூனைகள் போன்று பறவைகளை வீட்டில் வளர்க்க பிரியம் கொண்டுள்ள ஆர்வலர்களின் மத்தியில் கிளிகள் மற்றும் விதம் விதமான பறவைகளை வளர்க்க ஆர்வலர்கள் கொண்டிருக்கும் மோகம் சற்று அதிகமானது... காரணம்... அழகான நிறம், வசீகரமான தோற்றம், சக மனிதன் போல் நம்மிடம் உரையாடும் அதிசயம்...
- அதிலும் நன்கு பழக்கபடுத்தப்பட்ட கிளி என்றால், நாம் வீட்டின் பக்கத்து அறையில் இருக்கும் போதும் நம்மை பெயர் கூறி அழைக்கும் அந்த பாசம்... என கிளி வளர்க்க இளைஞர்களின் மத்தியில் என்றுமே ஆர்வம் அதிகம்...
- ஆனால், பலர் பறவைகளையும், கிளிகளையும் வளர்க்கும் போது அதன் இயல்பு தன்மையை பாதிக்கும் வகையில் பறக்க வாய்ப்பளிக்காமல் கூண்டிலேயே அடைத்தும், அதன் இறக்கைகளை வெட்டியும் வளர்த்து வருகின்றனர்...
- இதனால், பறவைகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு பல பறவைகளின் இனம் அழிந்தே போயுள்ளது... இது அப்படியே கிளிக்கும் பொருந்தும்... இதனால் கிளிகளில் அலெக்சாண்டிரியன் வகை பச்சை கிளிகள் இனமே அழிவின் விளிம்பில் உள்ளது....
- இதை கருத்தில் கொண்டு பச்சை கிளிகளை வீட்டில் வளர்க்ககூடாது என வனத்துறையினர் தடைசட்டம் கொண்டுவந்தனர்....
- இதில், 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டில் கோவையில் இருந்து 300க்கும் மேற்பட்ட கிளிகளை வீட்டில் இருந்த பறிமுதல் செய்த அதிகாரிகள், அதன் எண்ணிக்கையை 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளின் 800 ஆக உயர்த்தி காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.....
- இந்நிலையில், தமிழ்திரையுலகின் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் வீட்டிலிருந்து ஹோம் டூர் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியான நிலையில், அவர்கள் வீட்டில் பச்சை கிளிகள் வளர்த்து வருவது வனத்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
- இதையடுத்து, அவரின் வீட்டில் இருந்து அலெக்சாண்டிரியன் வகை பச்சை கிளிகள் 2 வனத்துறையினர் பறிமுதல் செய்தது பேசு பொருளாகியது... இதில், இரு கிளிகளையும் மீட்ட வனத்துறையினர் கிளிகளை கிண்டி சிறுவர் பூங்காவில் ஓப்படைத்திருப்பதாக தெரிவிக்கின்றனர்...
- இந்த விவகாரம் குறித்து வனத்துறை அதிகாரிகள் கேட்கும் கேள்விக்கும், விசாரணைக்கும் ரோபோ சங்கர் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- இந்நிலையில், ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா, இந்த விவகாரம் தொடர்பாக நமது தந்தி தொலைக்காட்சிக்கு விளக்கமளித்திருக்கிறார்...
- அதில், அரசாங்க விதிமுறைகளை பின்பற்றி அதிகாரிகள் கிளிகளை வீட்டில் இருந்து எடுத்து சென்றுள்ளதாகவும்...இதில் வருத்தமேதும் இல்லையெனவும் தெரிவித்திருக்கிறார்.
- நான்கு வருடங்களுக்கு முன்பாக எங்கள் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நண்பர் ஒருவர் பரிசாக கொடுத்தது தான் இந்த கிளிகள் எனவும், நாங்கள் விலை கொடுத்து வாங்கவில்லை எனவும் தெளிவுபடுத்தியிருக்கிறார்...
- ஒரு வீட்டில் பிறந்த குழந்தைகள் திருமணமாகி வேறு வீட்டிற்கு செல்வதில்லையா...அது போல கிளிகள் எங்களை விட்டு பிரிந்ததாக நினைத்து கொள்கிறோம் என உருக்கமாக கூறுகிறார் பிரியங்கா...