பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் ஆன்டோவுக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்
பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவாக இருந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ கைது செய்யப்பட்ட நிலையில், 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
பாலியல் உணர்வை தூண்டுவது, பெண் வன்கொடுமை, சமூக வலைத்தளங்களில் ஆபாச போட்டோக்கள் அனுப்புதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோவை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், நாகர்கோவில் பால்பண்ணை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். அதில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ இருப்பது தெரியவந்ததை அடுத்து, அவரை கைது செய்தனர். பின்னர், பெனடிக்ட் ஆன்டோவிடம் 12 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தி, குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, வரும் 3ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதால், நாகர்கோவில் சிறையில் பாதிரியார் அடைக்கப்பட்டார்.