முதலமைச்சர் பிறந்தநாள் விழா - துர்கா ஸ்டாலின் தலைமையில் 70 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

Update: 2023-03-03 13:05 GMT

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, 70 ஜோடிகளுக்கு முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின், இலவச திருமணம் நடத்தி வைத்தார்.

முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில், திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், கலைவாணர் அரங்கில் 70 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்துகொண்டு, ஒரே மேடையில் மாற்றுத்திறனாளி ஜோடி உள்பட மொத்தம் 70 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஒவ்வொரு ஜோடிக்கும் 4 கிராம் தங்கத் தாலி, கட்டில், பீரோ என 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்