தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போது, ஜப்பானின் ஒசாகா மாகாணத்தில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்டுமானம் மற்றும் சுரங்க உபகரணங்கள் தயாரிக்கும் பிரபல கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையைப் பார்வையிட்டார். தொடர்ந்து, அந்நிறுவனத்தின் உயர் அலுவலர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது, சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். மேலும், தமிழகத்தில் உள்ள கோமாட்சு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்திடவும் கோரிக்கை விடுத்தார்.