தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய முதல்வர் ஸ்டாலின்

Update: 2022-09-04 06:09 GMT

தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய முதல்வர் ஸ்டாலின்

மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது தொடர்பான நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்தியில் கூட்டாட்சி... மாநிலத்தில் சுயாட்சி... என்ற தமிழகத்தின் குறிக்கோளை இன்று எல்லா மாநிலங்களும் தழுவி வருகின்றன என்றும்,

அனைவருக்கும் அனைத்தும் என்ற திராவிட மாடல் கொள்கையின்பட, பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.

அதிவேக ரயில் வழித்தடத்தை அமைக்க வேண்டும் என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது தொடர்பாக, எளிமையான வரைமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும்,

சட்டம் ஒழுங்கை காப்பதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்