குடும்பத்தினருடன் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்தார் தலைமை நீதிபதி சந்திரசூட்... கோயில் நிர்வாகம் சார்பில் கும்ப மரியாதை
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றங்கள் துவக்க விழாவிற்காக, தமிழ்நாடு வந்துள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.