பறக்கும் நேரத்தில் திடீர் கோளாறு...விமானியின் செயலால் தப்பிய உயிர்கள் - விடுதிகளுக்கு மாற்றப்பட்ட பயணிகள்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு முற்பகல் 11:45 - க்கு விமானம் புறப்பட வேண்டும்.
இந்த விமானம் கோலாலம்பூரில் இருந்து காலை 10:45 மணிக்கு 194 பயணிகளுடன் சென்னை வந்தது.159 பயணிகளுடன் புறப்படவிருந்த விமானத்தில், திடீரென இயந்திர கோளாறு இருப்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் விமான பறப்பது ஆபத்து என்று கருதிய விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். பொறியாளர்கள் குழு விமான பழுதை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
பல மணி நேரம் காத்திருந்த பயணிகள் சோர்வடைந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பயணிகளுக்கு அவசர, அவசரமாக உணவு வழங்கப்பட்டது.
7 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்த பயணிகள் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து விமானம் ரத்து செய்யப்பட்டு நாளை புறப்பட்டு செல்லும் எனஅறிவித்து 159 பயணிகளை சென்னை நகரில் உள்ள பல்வேறு ஒட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.