காதிலிருந்து நிற்காமல் வடியும் ரத்தம்.. பள்ளிக்கு வரவேண்டாம் என்ற ஆசிரியர்கள்? - மகள் படும் வேதனை - துடிக்கும் பெற்றோர்

Update: 2023-02-04 08:47 GMT

அறுவை சிகிச்சை முடிந்தும், ப்ளஸ் டூ மாணவிக்கு காதில் இருந்து ரத்தம் தொடர்ந்து வருவதால், உரிய சிகிச்சை அளிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுமியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த சக்திவேல் - ஈஸ்வரி தம்பதியினரின் மகள், பிறவியில் இருந்தே வலது பக்கத்தில் காது இல்லாமல் பிறந்து இருக்கிறார்.

தற்போது பனிரெண்டாம் வகுப்பு படித்து வரும் சிறுமிக்கு, மருத்துவர்கள் ஆலோசனைப்படி, கடந்த 2019-ஆம் ஆண்டு, சென்னை கே.கே. நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில், சிறுமிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக கூறப்படுகிறது.

அறுவை சிகிச்சை முடிந்த சில நாட்களில், அவ்வப்போது காதின் மேற்புரத்தில் இருந்து ரத்தம் கசியத் தொடங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து, மற்றொரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

ஒரு கட்டத்தில், காதின் மேற்புறம் ரத்தக்கசிவு அதிகரித்ததால், மாணவியை பள்ளிக்கு வரவேண்டாம் ஆசிரியர்கள் கூறியதாக சொல்லப்படுகிறது. இதில் மனமுடைந்த சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், பொதுத் தேர்வுக்கு தயாராக முறையான பள்ளிப் படிப்பை தொடங்க உதவி செய்ய வேண்டும் என முதலமைச்சருக்கு சிறுமியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்