"சாப்பாட்டுல ஒரே கல்லு, வண்டு, புழு... வசதி இல்லாமல் தான் இங்க தங்கி படிக்கிறோம்.." தரமற்ற உணவால் மாணவர்கள் வேதனை
- ராயபுரம் ஆதிதிராவிடர் அரசினர் விடுதியில் பல்வேறு கல்லூரியில் பயிலும் மாணவர்கள், முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர்.
- இந்த விடுதியில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாகவும், உணவில் கல், புழுக்கள் இருப்பதாக கூறி மாணவர்கள் வேதனை தெரிவித்தனர்.
- இது குறித்து பலமுறை புகாரளித்தும் எந்த ஒரு நடவடிக்கையையும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டிய மாணவர்கள், விடுதி வளாகத்தில் அமர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தினர்.