பூந்தமல்லியில் கண்ணுக்கெட்டும் தூரம் வரை அணிவகுத்து நின்ற வாகனங்கள் - கழுகு பார்வை காட்சி
சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் கழுகு பார்வை காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் இரவு நேரங்களில் சுற்றுபவர்களை கண்காணிக்க, மாநகர போலீசார் சார்பில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், திடீரென கிண்டி- ஆலந்தூர் இணையும் பகுதியில் பரங்கிமலை போலீசார் தடுப்புகளை வைத்ததால், கிண்டி ஜிஎஸ்டி சாலையில் இருந்து, ஹால்டா வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.