போலீஸ் என கூறி நகை வியாபாரியிடம் ஒரு கோடியை பறித்த திருட்டு கும்பல் - சென்னையில் அரங்கேறிய சம்பவம்
- சென்னையில், போலீசார் எனக்கூறி, நகை வியாபாரியிடம் ஒன்றரை கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில், ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்
- சென்னை யானை கவுனி பகுதியில், கடந்த 3ம் தேதி, ஆந்திராவைச் சேர்ந்த நகை வியாபாரி சுப்புராவ் மற்றும் அவரது மேலாளர் ரகுமான் ஆகியோர், நகை வாங்குவதற்காக, ஒன்றரை கோடி ரூபாய் பணத்துடன் ஆட்டோவில் சென்றுள்ளனர்.
- அப்போது, அவர்களை வழிமறித்த கும்பல் ஒன்று, தங்களை போலீசார் எனக் கூறி, பணத்தை கொள்ளையடித்துச் சென்றது.
- காவல்நிலையம் சென்று உரிய ஆதாரங்களை காட்டி பணத்தை கேட்டபோது, பணம் கொள்ளையடிக்கப்பட்டது சுப்புராவுக்கு தெரியவந்தது. இதுதொடர்பான புகாரில், கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து சோதனை செய்தனர்.
- அதில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது இம்ரான் என தெரியவந்தது. இவர் மீது காவல்நிலையங்களில் 17 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் கண்டறியப்பட்டது.
- இந்த சம்பவத்தில் 5 தனிப்படைகள் அமைத்து, கொள்ளையர்களை போலீசார் தேடி வரும் நிலையில், தற்போது, கொள்ளை கும்பலை தப்ப உதவியதாக இம்ராஸ் என்பவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.