வெளிநாட்டிலிருந்து ஆசையாக வந்த கணவன்... வீடு கட்டும் திட்டத்தை நிராகரித்த மனைவி ?

Update: 2022-12-22 16:52 GMT

அம்பத்தூர் அருகே பத்மாவதி சீனிவாசன் நகரை சேர்ந்தவர் குமரகுரு. இவர் பல வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.கடந்த மாதம் தான் சென்னை வந்ததாக கூறப்படும் நிலையில், மனைவியிடம் சொந்த வீடு கட்டவதை பற்றி கூறியதாகவும், அதற்கு மனைவி மறுப்பு தெரிவித்ததால் இரு தினங்களாக மனமுடைந்து காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென உடல் முழுவதும் காப்பர் வயரை சுற்றி கொண்டு மின்சாரம் பாய்ச்சி குமரகுரு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்