ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு வழக்கு நிபந்தனையற்ற அணிவகுப்புக்கு தமிழகத்தில்.. அனுமதியா? மறுப்பா?
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் நடத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு, வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது.