"முத்தம் கொடுத்துட்டு போன குழந்தை செத்துருச்சு-னு சொல்லிட்டு டாக்டர் போயிட்டே இருகாங்க" சென்னை அரசு மருத்துவமனையில் பரபரப்பு

Update: 2022-11-27 03:07 GMT

மருத்துவர்களின் அலட்சியத்தால் மூன்றரை வயது குழந்தை இறந்துவிட்டதாக கூறி எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், தாடை வளர்ச்சி குறைபாடு காரணமாக மூன்றரை வயது ஆண் குழந்தை அனுமதிக்கப்பட்டது. பெற்றோரின் அனுமதியுடன் குழந்தைக்கு மயக்க மருத்து கொடுத்து எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது. மயங்கிய நிலையில் இருந்த அந்த குழந்தையின் உடல் முழுவதும் அதிக குளிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பெற்றோர் தகவல் அளித்ததை அடுத்து, வெண்டிலேட்டர் உதவியுடன் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தை நலமாக இருப்பதாக நம்பிக்கை தெரிவித்த மருத்துவர்கள், சிறிது நேரத்திலேயே குழந்தையின் உடல்நிலை ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், இறுதியில் சிகிச்சை பலனின்றி குழந்தை இறுந்துவிட்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், அலட்சியமாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி, மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்