இந்தியாவில் பாயும் ஓட்ட நாயகன்...! சீட்டாக்கள் இந்தியாவிற்கு வந்த நெகிழ்ச்சி தருணம்

Update: 2023-02-20 04:27 GMT
  • பல்லுயிர் வாழும் இந்தியா காடுகளில் அங்கமாக இருந்த ஆசிய சிவிங்கி புலிகள் எண்ணிக்கை முகலாயர் ஆட்சியில் ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்தது. நாளடைவில் வேட்டையாடல், வாழ்விட சுருங்கல் அவைகளை வதைக்க, இந்தியாவில் அழிந்துப்போன மாமிச உண்ணியினமானது.
  • இந்தியாவில் சிவிங்கி புலி முற்றிலும் அழிந்துவிட்டதாக 1952-ல் அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு, ஈரானிலிருந்து ஆசிய சிவிங்கி புலிகளை கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்ட முயற்சி வெற்றியடையவில்லை.
  • இதனையடுத்து 2010 வாக்கில் ஆப்பிரிக்காவிலிருந்து சிவிங்கிபுலிகளை கொண்டுவர முயற்சி தொடங்கியது.
  • திட்டத்திற்கு 2012-ல் விதித்த தடையை 2020-ல் நீக்கிய உச்சநீதிமன்றம், சோதனை அடிப்படையில் இந்தியாவில் சிவிங்கிபுலிகளைவிட அனுமதி வழங்கியது.
  • அதன்படி கடந்த செப்டமர் மாதம் நமீபியாவில் இருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட 5 பெண் சிவிங்கி புலிகள், 3 ஆண் சிவிங்கி புலிகளை பிரதமர் மோடி குனோ தேசிய பூங்காவில் திறந்துவிட்டார்.
  • 75 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்தியாவில் ஓட்ட நாயகனின் ஓட்டம் தொடங்கியது.
  • தென் ஆப்பிரிக்காவில் இருந்தும் சிவிங்கி புலிகளை கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கையை மேற்கொண்டது.
  • நட்புரீதியாக இந்தியாவிற்கு அடுத்த சில ஆண்டுகளில் 100-க்கும் அதிகமான சிவிங்கி புலிகளை வழங்க தென் ஆப்பிரிக்க ஒப்பந்தம் செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்காவிலிருந்து சி-17 குளோப்மாஸ்டர் ராணுவ விமானம் மூலம் 12 சிவிங்கி புலிகள் குவாலியர் கொண்டுவரப்பட்டது.
  • குவாலியரிலிருந்து குனோ தேசிய பூங்காவிற்கு விமானப்படை ஹெலிகாப்டர் வாயிலாக அழைத்துச் செல்லப்பட்ட சிவிங்கி புலிகள், திறந்துவிடப்பட்டது
  • இந்திய வனச்சட்டப்படி ஒரு மாத காலம் தனிமையில் கண்காணிக்கப்படும் சிவிங்கி புலிகள், பின்னர் பூங்காவின் பரந்த வனப்பகுதிக்கு திறந்துவிடப்படும். இதைத் தொடர்ந்து இந்தியாவில் சிவிங்கி புலிகள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்