"ChatGPT-ஆல் IT ஊழியர்கள் வேலைக்கு ஆபத்து".. 'ZOHO' ஸ்ரீதர் வேம்பு ஷாக் தகவல்

Update: 2023-04-04 08:53 GMT
  • ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சாட்ஜிபிடி, GPT-4 வருகையால் மனித குலம் முன்பிருக்கும் வேலைவாய்ப்பு சுருங்கும் என்ற எச்சரிக்கை நிலவுகிறது.
  • சாட்ஜிபிடி பயனருக்கு தேவையான கட்டுரையை எழுதுகிறது என்றால் GPT-4 கணினிக்கு தேவையான கோடிங்கை எழுதுகிறது.
  • ஐ.டி. துறையில் 20 விதமான பணிகளுக்கு மாற்றாக GPT-4 இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
  • இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவால் கணினி புரோகிராம் எழுதுவது தொடர்பான பல வேலைகளுக்கு ஆபத்து நேரிடும் என சோஹோ தலைவர் ஸ்ரீதர் வேம்பு எச்சரித்திருக்கிறார்.
  • இதனை கட்டுப்படுத்த ஒரு வலுவான கொள்கை வகுப்பது அவசியம் என மத்திய அரசுக்கு பரிந்துரையை சமர்பித்திருக்கும் ஸ்ரீதர் வேம்பு, பல தனி நபர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விஷயத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் உலகளாவிய ஏகபோகங்களை தடுக்கும் AI கொள்கைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்