அன்று 500 பேரை பலி வாங்கிய அதே இடத்தில் இன்று 100 பேர் மரணம் - இரட்டை காரால் நேர்ந்த பயங்கரம்

Update: 2022-10-30 09:54 GMT

சோமாலியாவின் தலைநகர் மொகடிஷுவில் சனிக்கிழமை நடந்த இரட்டை கார் குண்டுவெடிப்புகளில் 100 பேர் பலியான ச்மபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெடிபொருட்கள் பொருத்தப்பட்ட வாகனம் கல்வி அமைச்சக வளாகத்திற்குள் புகுந்து முதல் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. காயம் அடைந்தவர்களை மீட்கும் பணி நடைபெற துவங்கிய அடுத்த நில நிமிடங்களிலேயே அதே இடத்தில் மற்றொரு வெடிகுண்டு விபத்து நிகழ்த்தப்பட்டது. இதில் 100 பேர் பலியான நிலையில், மேலும் 300க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அடிக்கடி தலைநகரைக் குறி வைக்கும் அல்-கொய்தாவுடன் இணைந்த அல்-ஷபாப் தீவிரவாத குழுவை எதிர்த்துப் போராடும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அந்நாட்டு அதிபர், பிரதமர், மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கூடிய அதே நாளில் மொகடிஷுவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுமார் 5 வருடங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 500 பேர் பலியான அதே இடத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தீவிரவாத தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் பிரதமர் ஹம்சா அப்டி பாரே அல்-ஷபாப் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்