நடிகர் கமல்ஹாசன் புக்கிங் செய்த கார், 10 நாட்களில் வந்துவிடும் என, ஓட்டுநர் ஷர்மிளாவின் தந்தை தெரிவித்தார். கோவையைச் சேர்ந்த ஓட்டுநர் ஷர்மிளா, வாடகைக்கு கார் தொழில் புரிவதற்காக, கமல் பண்பாட்டு மையம் சார்பில், கார் வாங்குவதற்கான காசோலையை நடிகர் கமல்ஹாசன் வழங்கினார். இது குறித்து பேசிய ஷர்மிளாவின் தந்தை மகேஷ், கமல்ஹாசன் புக்கிங் செய்து கொடுத்த கார், 10 நாட்களில் வந்துவிடும் எனவும், தனது மூன்று ஆட்டோக்கள் மற்றும் காருக்கு 35 ஆயிரம் வரை இஎம்ஐ கட்டி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் சமூக வலைதளங்களில் தவறாக சித்தரித்து செய்தி பரப்புவதாகவும் குறிப்பிட்டார்.