மாமல்லபுரத்தில் மாலை 6 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படாத நிலையில், மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் குழுவினர் அங்கு ஆய்வு செய்தனர். மாமல்லபுரம் புராதன சின்னங்களை மின் விளக்கு வெளிச்சத்தில் இரவு நேரத்தில் கண்டுகளிக்க, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கலாமா என்பது குறித்து ஆய்வு செய்தனர். புராதன சின்னங்கள் பகுதியில் மின் விளக்குகள் சரியாக எரிகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.