உத்தரபிரதேச மாநிலம் எட்டாவா நகரில் பெய்த கனமழை காரணமாக பல இடங்களை மழைநீர் சூழ்ந்தது. மெய்பூரி பகுதியில் சுரங்க பாதையில் சென்ற பேருந்து மழைநீரில் சிக்கி கொண்டது. இதனால் பயணிகள் அச்சமடைந்தனர். பின்னர் ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு கயிறு கட்டி பேருந்து மீட்கப்பட்டது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் நிம்மதியடைந்தனர்.