பேருந்து ஓட்டுநரை கட்டையால் தாக்கிய நபர் - போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டம்

Update: 2022-12-29 09:00 GMT

கன்னியாகுமரி அருகே, அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய நபரை கைது செய்யக் கோரி, போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மார்த்தாண்டத்தில் இருந்து அஞ்சுகண்டறை நோக்கி சென்றுக் கொண்டிருந்த அரசு பேருந்தை, செல்வான்ஸ் என்பவர் இருசக்கர வாகனத்தில் முந்தி செல்ல முயன்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே ஆத்திரமடைந்த அந்த நபர், பேருந்து ஓட்டுநர் பத்மகுமாரை கட்டையால் தாக்கியுள்ளார்.

இதில் பேருந்து ஓட்டுநர் காயமடைந்த நிலையில், அவரை தாக்கிய நபரை கைது செய்ய கோரி, நள்ளிரவில் பனிமனை முன்பு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்