சகோதரிக்கு வந்த திடீர் சந்தேகம்..தோண்டி எடுக்கப்பட்ட 10 நாளுக்கு முன் புதைக்கப்பட்டவரின் சடலம்.. தேனியில் ஷாக்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பத்து நாட்களுக்கு முன் அடக்கம் செய்யப்பட்டவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக வந்த புகாரைத்தொடர்ந்து, போலீசார் உடலை தோண்டி எடுத்து போலீசார் பிரோத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
வடகரை பட்டாப்புளி நடுத்தெருவை சேர்ந்த 53 வயதான சேகர் என்பவர், கடந்த 10 தினங்களுக்கு முன்பு பெரியகுளம் வடகரை போக்குவரத்து பணிமனை முன்பு உயிரிழந்து நிலையில் கிடந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து உறவினர்கள் இறந்தவர் உடலை மீட்டு நல்லடக்கம் செய்தனர். இந்நிலையில் சேகர் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி அவரது சகோதரி, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரேவிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.
விசாரணையில் இரண்டு பேர் சேகரை அடித்துக் கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் இரண்டு நபர்களை அழைத்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து பெரியகுளம் வட்டாட்சியர் மற்றும் டிஎஸ்பி
முன்னிலையில் புதைக்கப்பட்ட சேகரின் உடலை தோண்டி எடுத்து போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.