தொழிலதிபர் கொண்டு வந்த பையில் துப்பாக்கி குண்டுகள்..சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

Update: 2023-05-19 01:57 GMT

சென்னை விமான நிலையத்தில் திருச்சி செல்ல வந்திருந்த, தொழிலதிபரின் பையில் இருந்து 5 துப்பாக்கி குண்டுகளை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து திருச்சி செல்வதற்காக தொழிலதிபர் ராஜ்குமார் வந்துள்ளார். அவரது உடைமைகளை, ஸ்கேன் செய்து பார்த்த போது, அபாயகரமான பொருட்கள் இருப்பதற்கான, எச்சரிக்கை மணி ஒலித்தது. இதை அடுத்து பையை பரிசோதித்த பாதுகாப்பு அதிகாரிகள், 5 துப்பாக்கி குண்டுகள் இருந்ததை கண்டு பிடித்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பாதுகாப்புக்காக முறைப்படி லைசென்ஸ் பெற்று,கை துப்பாக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. அந்த துப்பாக்கியில் பயன்படுத்துவதற்கான துப்பாக்கி குண்டுகள் தான் இவை என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. கார் ஓட்டுனர், பையை தவறுதலாக மாற்றி வைத்து விட்டார் என தொழில் அதிபர் கூறினார். இதை அடுத்து போலீசார், தொழிலதிபரின் ஒட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து பின்னர் எழுதி வாங்கி கொண்டு எச்சரித்து அனுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்