உடைந்து விழுந்த மின் கம்பம்..! விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்
மதுராந்தகம் அருகே மின்கம்பம் உடைந்து விழுந்ததால், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுமி படுகாயமடைந்தார். மதுராந்தகம் அருகே உள்ள அவுரி மேடு கிராமத்தை சேர்ந்த பாண்டியன் என்பவரது 11 வயது மகள் ரித்திகா. இவர் வீட்டிற்கு எதிரே விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கிருந்த மின்கம்பம் ஒன்று, திடீரென உடைந்து சிறுமி மீது விழுந்தது. கையில் பலத்த காயமடைந்த சிறுமி, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில், சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றாததே விபத்து ஏற்பட காரணம் என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.