சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள சென்னை குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான இரண்டு தண்ணீர் நிரப்பும் நிலையங்கள் உள்ளன.
அதில் ஒன்று செயல்படாத காரணத்தால் லாரிகளுக்கு தண்ணீர் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.
இதனால் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைக்கு தண்ணீர் லாரிகள் இயங்காது என அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில் தந்தி டிவியில் செய்தி வெளியிட்ட பின்னர் அதிகாரிகள் உடனடியாக தண்ணீர் நிரப்பும் நிலையத்திற்கு வந்து அதனை சரி செய்தனர்.
நாளை முதல் உரிய தண்ணீர் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து நாளை அறிவித்து இருந்த வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாளை முதல் வழக்கம் போல் இயங்குமெனவும் அவர்கள்