சிறுவன் மரணம் - "அந்த லேடி வெளிய வரக்கூடாது.." பெற்றோர் பரபரப்பு பேட்டி

Update: 2022-09-09 07:37 GMT

மாணவன் உயிரிழப்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: உயிரிழந்த மாணவனின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மருத்துவ குழு அறிக்கை போலியாக தயார் செய்யப்பட்டுள்ளது எங்களிடம் விசாரிக்காமல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது பெற்றோர் குற்றச்சாட்டு இதனையடுத்து இறந்த பால மணிகண்டனுக்கு உரிய நியாயம் கிடைக்க சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்திய மருத்துவ கவுன்சில் மூலம் ஆய்வு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிம் பேசிய உயிரிழந்த சிறுவனின் பெற்றோர்: சிபிஐ விசாரணை நடந்தால் மட்டுமே தனது மகன் இறப்பு நியாயம் கிடைக்கும் எனவும், புதுச்சேரி அரசு நியமித்த மருத்துவர் குழு அறிக்கை தவறானது எனவும், சிறுவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து தங்களிடம் எந்த தகவலும் பெறாமலே அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது என குற்றம் சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்