புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள ஜி.என்.பாளையத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் மணிகண்டன், ஷீலா தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களின் இளைய மகன் ஜஷ்வந்த், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென மாயமானதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடினர். பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில், வீட்டின் அருகே உறவினர் ஒருவர் புதிதாக கட்டி வரும் வீட்டின் தரை நீர்த்தேக்க தண்ணீர் தொட்டியில் சிறுவன் ஜஸ்வந்த் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சிறுவனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விளையாடும் போது தண்ணீர் தொட்டியின் மேலே இருந்த மரப்பலகை உடைந்து உள்ளே விழுந்து, சிறுவன் நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.