அங்கன்வாடி மையத்தில் சிறுவனுக்கு மூக்கு உடைந்து காயம் - மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சிறுவனின் தந்தை
காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் கிராமத்தில் அரசு அங்கன்வாடி மையத்தில் மேஜை கீழே விழுந்ததால் மூன்றரை வயது சிறுவனுக்கு மூக்கு உடைந்து காயம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் ஒன்றியம் குறும்பிறை கிராமத்தைச் சேர்ந்த சரவணன் மூணரை வயது மகன் யோவானை, அங்கன் வாடி மையத்தில் சேர்த்துள்ளார். இந்நிலையில் அங்கன்வாடி மையம் பணியாளர் மலர்கொடி என்பவர் மீது, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச் செல்வி மோகனிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அங்கன்வாடி மையம் பணியாளர் மலர்கொடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.