அரண்மனை காவலரைப் போல் மாறுவேடத்தில் இருந்த சிறுவன்... சிறுவனுடன் மகிழ்ச்சியாக உரையாடிய அரச தம்பதி
அமெரிக்காவின் மசாச்சுசெட்ஸ் மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய காலநிலை தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமான க்ரீன்டவுன் ஆய்வகத்தை பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேதரின் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
அப்போது பக்கிங்ஹாம் அரண்மனை காவலரைப் போல் உடையணிந்த 8 வயது சிறுவன் ஹென்றி, ஆய்வு முடிந்து அரச தம்பதி வெளியே திரும்பும் வரையில் அவர்கள் வருகைக்காக காத்திருந்தான்...
ஆய்வகத்தில் இருந்து வெளியே வந்த வில்லியம்-கேத் தம்பதி ஹென்றியைக் கண்டு ஆச்சரியத்தில் உறைந்து போயினர்...
தொடர்ந்து சிறுவனுடன் சிறிது நேரம் மகிழ்ச்சியாக உரையாடி விட்டு அவர்கள் புறப்பட்டனர்...