முன்னாள் முதல்வருக்கு வெடி குண்டு மிரட்டல்... நண்பனை கத்தியால் குத்திவிட்டு மீண்டும் ஜெயிலுக்குள்

Update: 2023-02-10 14:51 GMT

முன்னாள் முதல்வருக்கு வெடி குண்டு மிரட்டல்... நண்பனை கத்தியால் குத்திவிட்டு மீண்டும் ஜெயிலுக்குள்

தாம்பரம் அருகே ஜாமினில் வெளியே வந்த கொலை குற்றவாளி, மீண்டும் ஒருவரை கத்தியால் குத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, தாம்பரம் அருகே உள்ள ராஜகீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த வினோத், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கும், தாம்பரம் ரயில் நிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மூன்று முறை சிறை சென்றவர்.

இதுபோல, போதையில் ஏற்பட்ட தகராறில், தனது நண்பரை கத்தியால் குத்தி கொலை செய்து கைது செய்யப்பட்டார்.

தற்போது, ஜாமினில் வெளிவந்த அவர், மது போதையில் ராஜன் என்பவரை கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த ராஜன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தப்பியோட முயன்ற வினோத்தை, சேலையூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்