பாஜகவினர் வைத்த சர்ச்சைக்குரிய பேனர் - ஆட்சி கலைப்புக்கான எச்சரிக்கையா?
புதுக்கோட்டையில், பாஜகவினரால் வைக்கப்பட்டுள்ள பேனர், அப்பகுதியில் பரபரப்பை கிளப்பியுள்ளது. சமீபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆதரவாக, ஆளுநரின் ஆளுமையே என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் நகர் முழுவதும் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தற்போது, '356... ஜனவரியில், 1976, 1991 வரலாறு' என்ற வாசகம் அடங்கிய, சர்ச்சைக்குரிய பேனர் வைக்கப்பட்டுள்ளது.