பிரியாணி கேட்ட மனைவியை தீ வைத்து எரித்துக் கொன்ற கணவன்..! சென்னையில் பயங்கரம்.

Update: 2022-11-09 04:31 GMT

பிரியாணி கேட்ட மனைவியை தீ வைத்து எரித்துக் கொன்ற கணவன்..! சென்னையில் பயங்கரம்...

சென்னையில் தனியாக பிரியாணி சாப்பிட்டு வந்த தன்னிடம் மனைவி சண்டையிட்டதால் இருவரும் தீ வைத்துக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அயனாவரத்தில் வசித்து வரும் முதியவர் கருணாகரன். இவரின் மனைவி பத்மாவதி. இவர்கள் தங்கள் 4 குழந்தைகளுக்கும் திருமணம் முடித்து வைத்து விட்டு தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், முதியவர் தனியாக சென்று பிரியாணி சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அவரது மனைவி பத்மாவதி அவரிடம் சண்டையிட்டுள்ளார். இதில், சண்டை முற்றவே கருணாகரன் தன் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இச்சம்பவத்தில், உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில் பத்மாவதி, தன் கணவரை கட்டிப்பிடித்துள்ளார். இதில் அவர் மீது தீப்பற்ற இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், பத்மாவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கருணாகரன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்