கெத்தாக சென்னை வந்த வந்தே பாரத் ரயில்! | vande bharat express | chennai | pm modi | thanthi tv

Update: 2022-11-11 14:50 GMT

தென் இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை பெங்களூருவில் வைத்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதிநவீன வசதிகளுடன் கூடிய 4 வந்தே பாரத் ரயில்கள், வட இந்தியாவில் இயங்கி வருகின்றன. இந்நிலையில், சென்னை - மைசூருக்கு இடையேயான 5வது வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டது. பெங்களூரு கிராந்திவீர சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையத்தில் வைத்து

இந்த புதிய ரயில் சேவையை பிரதமர் மோடி பச்சை கொடி காட்டி, தொடங்கி வைத்தார். அப்போது அவருடன் கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உடனிருந்தார்.

முன்னதாக பெங்களூரு சென்றிருந்த பிரதமர் மோடியை கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் கர்நாடக ஆளுநர் வரவேற்றனர். இதையடுத்து, கர்நாடகாவின் சட்டசபை கூடும் இடமான விதான சவுதாவிற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்த துறவி கனகதாசர் மற்றும் மகரிஷி வால்மீகி சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பெங்களூரு கிராந்திவீர சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையத்தில் வைத்து, தென் இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த கையோடு,

கர்நாடகாவின் முதல் பாரத் கவுரவ் காசி தர்ஷன் ரயில் சேவையையும் அவர் தொடங்கி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்