தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்டி உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பயணிகள் அருவிகளில் குளித்து விட்டு வெளியே வந்து பார்க்கும்போது அணிந்திருந்த தங்கச் சங்கிலிகளை காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் சிவகங்கையை சேர்ந்த தனலட்சுமி, பட்டுக்கோட்டையை சார்ந்த வளர்மதி, சரோஜா, வானஜோதி உள்பட ஏழு பேர் அணிந்திருந்த சுமார் 32 சவரன் தங்க நகைகள் மாயமானது.
அருவிகளில் அதிகமாக தண்ணீர் வந்தால் இவை அறுபட்டு செல்ல வாய்ப்பு உள்ளது. அருவிகளுக்கு குளிக்க வருபவர்கள் விலை உயர்ந்த தங்க நகைகளை அணிய வேண்டாம் என்றும் அவ்வாறு அணிந்தால் அதனைப் பிடித்துக் கொண்டு அருவியில் குளிக்க வேண்டும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.