உஷார் மக்களே! அடுத்த 48 மணிநேரம்.. .படையெடுக்க காத்திருக்கும் மழை..!

Update: 2023-07-16 10:39 GMT

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்க வாய்ப்புள்ளது.அடுத்த 48 மணி நேரத்திற்கு தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடல், தெற்கு இலங்கை கடலோரம், அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல், அந்தமான் கடலிலும்,நாளை மத்திய வங்கக் கடல், தெற்கு வங்கக் கடல், வடக்கு அந்தமான், அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலிலும்,லட்சத்தீவு, வடக்கு கேரள-கர்நாடக கடலோரம், அதை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலிலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்